தமிழ் இளைஞர்களின் பொங்கல் விழாவும் பண்பாட்டு பெருவிழாவும்!!!!

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் எமது சமூகத்தில் உள்ள தன்னெழுச்சிமிக்க இளைஞர்கள் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைத்து 19.01.2019 ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் யாழ் முற்றவெளி மைதானத்தில் தைப் பொங்கல் நிகழ்வு மற்றும் பண்பாட்டு பெருவிழா இடம்பெற்றது.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்ற இவ் உலகில் காலத்துக்கு காலம் நம் பண்பாட்டு பாரம்பரியங்களின் வழக்கு ஒழிந்து கொண்டே போகிறது. இவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையிலே உள்ளது. வடக்கு கிழக்கு மலையக மண்ணை ஒன்றிணைத்து பொங்கல் நிகழ்வு தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முற்றவெளி மைதானத்தில் வட கிழக்கு மற்றும் மலையக இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் 108 பானைகளில் மிகவும் உணர்வுபூர்வமாக இன்றையதினம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இப்பொங்கல் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மலையக இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் கலைஞர்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் இப்பொங்கல் நிகழ்வில் தாயக உறவுகளை தாண்டியும் சில சர்வதேச உறவுகளும் கலந்து கொண்டமை எம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி தன்மையை உண்டுபண்ணியது.

பொங்கல் நிகழ்வைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகள் சிலவும் இடம்பெற்றன. மலையக கிழக்கு வடக்கு மாகாண இளைஞர்கள் ஒன்றிணைந்து இளைஞர்களான எமது எதிர்கால திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்று நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

யாழ் மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் தளபதி கேணல் கிட்டு அண்ணா அவர்கள் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ் முற்ற வெளியை அழகு படுத்தும் நோக்கில் வரிசையாக நாட்டப்பட்ட பனை மரங்கள் இன்று அவர்களின் நினைவாக இளையோர் முன்னெடுக்கும் இந்த பண்பாட்டு பொங்கல் விழாவிற்கு பொங்கல் பொங்கு வதற்கான விறகு கொடுத்து உதவுகிறது எங்கள் தமிழரின் அடையாளம் கற்பகதரு நாம் விட்டுச் செல்லும் ஒவ்வொரு தடங்களும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஏதோ ஒருவகையில் உறுதுணையாக இருக்கும்.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com