தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டு இருந்தது.

தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டு இருந்தது.

வட மாகாணத்தில் 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருக்கிறார்கள்.

இதில்,...

*யாழ்ப்பாணம் மாவட்டம் : 
36 ஆயிரத்து 334 குடும்பங்கள்

*கிளிநொச்சி மாவட்டம்    : 
8 ஆயிரத்து 435 குடும்பங்கள்

*முல்லைத்தீவு மாவட்டம்   : 
5 ஆயிரத்து 961 குடும்பங்கள்

*வவுனியா மாவட்டம்           :   
6 ஆயிரத்து 712 குடும்பங்கள்

அதே போல.....

40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த பெண்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் 90,000 இற்கும் அதிகமான பெண் தலைமைத்துவ குடுமபங்கள் இருக்கிறது. இத்தகைய பெண் தலைமைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை மிக அபாயகரமான நிலையில் இருக்கிறது.

இவர்களை முன்னிறுத்தி செய்ய வேண்டிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி கடந்த 4 ஆண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தமிழ் மக்களின் பாராளமன்ற தலைமைத்துவமாக இருக்கிற தமிழரசு கட்சியின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டு இருந்தது.

The war has left behind almost 90,000 widows in the North-East. There is a need for a clear policy to build their capacity and uplift their lives. These widows have become economically and socially vulnerable. Adequate steps must be taken to swiftly and effectively create livelihood programmes and other necessary measures to alleviate their present condition. The needs of children, elders and disabled also need to be addressed.

வடகிழக்கில் கிட்டத்தட்ட 90,000 விதைவகள் இருக்கிறார்கள் . அவர்கள் திறனை வளர்க்கவும், வாழவதாரத்தை உயர்த்தவும் ஒரு தெளிவான கொள்கை தேவை. இந்த விதவைகள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மாறியுள்ளனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் தேவையான ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்படும்.

ஆனால் இன்று 2020 ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் திகதியும் நெருக்கி விட்டது . மத்திய அரசாங்கத்தில் 4 ஆண்டுகள் அங்கம் வகித்த எங்கள் பாராளமன்ற உறுப்பினர்களால் குறைந்த பட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான ஒரு வாழ்வாதாரத் திட்டதை தனும் முன் வைக்க முடியவில்லை.அதை பற்றி அவர்களுக்கு அக்கறையும் இல்லை.அதை பற்றி பேசவும் அவர்கள் தயாரில்லை.

தங்களை மாற்று சக்திகளாக அடையப்படுத்தும் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றவர்களாவது  இந்த அபலை பெண்கள் பற்றி பேச முன் வர வேண்டும். அவர்களுக்கான  சமூக வாழ்வாதாரத் திட்டங்களை முன் வைக்க வேண்டும்.

-நன்றி 
இனமொன்றின் குரல் Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com