தமிழர் இயக்கத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அநாமதேய பிரச்சாரங்கள் பற்றிய தெளிவூட்டல்!!!

தமிழர் இயக்கத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அநாமதேய பிரச்சாரங்கள் பற்றிய தெளிவூட்டல்!!!

தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் பன்னாட்டு அரசியற் தளங்களில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இவ் அறிக்கையின் ஊடாக நாம் கடந்த ஆண்டில் எம் மீது இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் அநாமதேய பிரச்சாரம் சார்ந்து எமது தெளிவூட்டல்களையும், விளக்கங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

தமிழீழ மக்களின் ஆயுதம் தரித்த விடுதலைப்போராட்டம் மௌனிக்கபட்டு பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் எம் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனவழிப்பிற்கு இன்றுவரை ஓர் நீதி கிடைக்கவில்லை என்பதானது மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடையம் எம்பதுடன் தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக போராட வேண்டும் என்பதையும் கட்டியம் கூறி நிற்கின்றது.

தமிழர்களாகிய எமக்கு இன்று ஏற்பட்டுள்ள இக் கையறு நிலையும் அதன் விளைவாக எம் மனங்களில் ஏற்பட்டுள்ள அழியாத வடுவும், தளர்வும், தொய்வு நிலையும் எமது போராட்ட குணத்தையும், ஓர்மத்தையும் சற்று தளர்வுக்குட்படுத்தியுள்ளது. இதன் விளைவாக நாம் இன்று அரசியல், இராசரீக தளத்திலும் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இவ் இடைவெளியை சிறீலங்கா அரசு பயன்படுத்திக்கொள்ளும் அதே சமயத்தில், அதன் மீது அனைத்துலக ரீதியாக எழுந்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் எளிதாகத் தப்பிக் கொள்ளவும் காய்களை நகர்த்தி வருகின்றது.

இச் சூழலில் தமிழர் இயக்கமாகிய நாம் எம்மால் இயன்ற அனைத்துச் செயற்பாடுகளையும் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் பன்னாட்டு அரசியற் தளங்களில் முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகளிற்க்காக குரல்கொடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இதுவரை அண்ணளவாக 600 இற்கும் மேற்பட்டவர்கள் தமிழர் இயக்கத்தின் ஊடாக அழைக்கபட்டுள்ளார்கள்.

இன்றைய சூழலில் ஐ.நா மனித உரிமைகள் அவை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய இரு இராசரீக தளத்திற்குள்ளும் பிரவேசிக்கும் "ACCREDITATION" என்று அழைக்கக் கூடிய "உள்நுழைவு அட்டையை" வழங்கக் கூடிய நிலையில் இயங்கும் ஒரே ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு தமிழர் இயக்கமே ஆகும். அதற்கான பொறுப்புணர்வுடனேயே எமது செயற்திட்டங்கள் அனைத்தும் இன்றுவரை செயற்படுத்தப்படுகின்றன. தமிழின அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரிற்கும் உள் நுளைவு அட்டையை பெறுவதற்கான பொறுப்புத்துறப்புக் கடிதமும், தமிழீழம், தமிழகம் உட்பட பன்னாடுகளில் இருந்து கலந்துகொள்பவர்கள் VISA-கடவு அனுமதி பெறுவதற்கான கடிதங்களும் எவ்வித கட்டணங்களும் பெறாமல் மனிதநேயத்துடனும், மனித உரிமைகள் தளத்தில் பணிபுரியும் பொறுப்புணர்வுடனுமே வழங்கப்பட்டது. இதுவே எதிர்காலத்திலும் எமது நடைமுறையாக இருக்கும்.

இத்தகைய நிலையில் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் சயீவன் அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்ட நேரடிச் சாட்சியம் என அறிமுகப்படுத்தப்பட்ட ஓரு நபரிடம் இருந்து தமிழர் இயக்கம் பணம் அறவிட்டு VISA-கடவு அனுமதி பெறுவதற்கான கடிதம் கொடுத்ததாக கூறும் குற்றச்சாட்டையும், ஆட்கடத்தலில் ஈடுபட்டோம் என்ற குற்றச்சாட்டையும் தமிழர் இயக்கம் முற்றாக மறுக்கின்றது. தமிழர் இயக்கமானது சுவிசில் பதிவிசெய்யப்பட்ட ஓர் பன்னாட்டு அமைப்பாகும்.

தமிழர் இயக்கம்  தனது செயற்பாடுகளை இந்த நாட்டின் சனநாயக அற நெறிகளிற்கு உட்பட்டே செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் குரலாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய இரு தளங்களிற்குள்ளும் பிரவேசிக்கும் ACCREDITATION - நுழைவு அட்டையை வழங்கக் கூடிய நிலையில் இயங்கும் ஒரே ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு என்ற பொறுப்பையும், கடமையையும் ஒருபோதும் அற்ப சொற்ப விடையங்களிற்காக தமிழர் இயக்கம் சரணாகதியாக்காது என்பதை மாவீரர்களின் சாட்சியாக இடித்துரைக்கின்றோம்.

நாம் பாரிய நிதி நெருக்கடிகள் மத்தியிலும், சவால்களுக்கு மத்தியிலும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவ்வேளையில், எமது வேலை திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எம்மீது சேறு பூசும் வகையிலும் அநாமதேய செய்திகளை சமூக வலை தளங்களிலும், பண்பாட்டு ஊடகங்களிலும் சிலர் பரப்பி வருகின்றனர்.

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக பாரிய நகர்வுகளை நாம் மேற்கொண்டுள்ள இத் தருணத்தில் எம்மீது திட்டமிட்டு மெற்கொள்ளப்படும் அநாமதேய பிரச்சாரங்கள் தமிழர் இயக்கத்தை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்து கருவறுக்கும் யுத்தியை கொண்டதாகும். இவர்கள் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளாகவே இருக்க முடியும் என்பதில் எமக்கு எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.

அத்தோடு தாயகம் நோக்கிய எமது வேலைத்திட்டங்களிற்கு பல சவால்களிற்கு மத்தியிலும் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவரிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com