மாட்டுத் தலைமையும், மாறாத யாழ்ப்பாணியமும்.....!!- சுபாகரன்

மாட்டுத் தலைமையும், மாறாத யாழ்ப்பாணியமும்.....!!- சுபாகரன்

கடந்த 50 வருடங்களுக்குள் ITAK, அல்லது, கடந்த 19 வருடங்களுக்குள் TNA,  இலங்கை வாழ் தமிழர்களுக்கு செய்த அல்லது செய்வித்த;
>அரசியல்,
>பொருளாதார,
 முன்னேற்றங்கள் என்ன ..??

இக் கேள்வியை யாழில் நான் கேட்ட பொழுது; ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனக்கு தெரிய, 2019 ஆண்டின் பிற்பகுதியில் திரு.ரணில் கொடுத்த அரச காசில், "கம்பெரிலியா" என்ற பெயரில் சிலமாதங்கள் TNA'யின் MP'கள் கம்பு சுத்தினார்கள். அவர்கள் கம்பு சுத்தின இடத்தை  இப்ப பார்த்தால், மழை வெள்ளம் குளம்போல நிக்கிறது..!!

அதற்கிடையில், எங்கட சம்பந்தன் (MP) ஐயா,87 வயதாகிவிட்டது. சுயமாக எங்கும் நடக்க முடியாத நிலை தற்பொழுது. பல தசாப்தங்களுக்கு பின்பு தமிழர்களில் ஒருவருக்கு "இலங்கையில் தமிழர் ஒருவருக்கு  எதிர்க்கட்சி தலைவர்" பதவியை கொடுத்து அழகு பார்த்தால்,  அவர் செய்தது; தனது பதவிக்கான ஆசனத்தை நிரப்பியது மட்டுமே.!

அதனால் அவருடைய பதவிக் கதிரை சனநாயக முறைப்படி வேறு ஒருவருக்கு கொடுப்பட்டது என்பது வேறு கதை. அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளது.

இப்பவும்  எங்கட சம்பந்தன் (MP) ஐயாக்கு MP பதவி தேவையாம். அதற்கு முன் மொழிபவர் திரு.சுமந்திரன் MP. கேட்க சிரிப்பாக இல்ல ...????

>>அதுவென்ன..? இலங்கை மலையகத்தில் தமிழன் வாழ்ந்தால் அவர்கள்  "மலையக தமிழர்கள்". அதே தமிழன் வன்னியில் வாழ்ந்தால் "ஈழத் தமிழர்கள்" என்று சொல்லுகிறார்கள்..!

இந்த நுணுக்கத்தை மிகவும் துல்லியமாக விளங்கிய திரு.சுமந்திரன் MP, தனக்கான ஒரு ஆதரவு தளத்தை ஏற்படுத்த களத்தில் இறங்கியுள்ளதை, அண்மைய செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன..!!

>>"சமயமும், சாதியும்" ஊறிப்போன யாழ்ப்பானியர்கள் மத்தியில், அல்லது ITAK'யில், திரு.சுமந்திரன் MP'யின் இவ் நகர்வு எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கும் என்பது, எனது கேள்விக்குறியே...!<<

தொடரும்....!
கரன் (சுபாகரன்) ஜெர்மனி.
02.03.2020
Diplomatic_Observation
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com