கப்டன் பண்டிதர் அவர்களின் வீட்டு நெஞ்சை நெருடும் உண்மைச் சம்பவம் .....


கப்டன் பண்டிதர் அவர்களின் வீட்டு நெஞ்சை நெருடும் உண்மைச் சம்பவம் .....

நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த நண்பர்கள் மணிவண்ணன்,பார்த்திபன் மற்றும் விஷ்ணு ஆகியோர் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும் ஆரம்ப கால ஆயுத மற்றும் நிதி பொறுப்பாளராக இருந்து வீரச்சாவடைந்த கப்டன் பண்டிதர் அவர்களின் வீட்டிற்கு சென்று இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று நண்பன் பார்த்திபன் அந்த அம்மாக்கு உதவி செய்யனும் "நீ வந்து பார்வையிட்டு என்ன தேவையோ அதை செய்" என கேட்டிருந்தார். அதன் பிரகாரம் நானும் பார்த்திபனும் சென்றிருந்தோம். செல்லும் போது நான் கூறினேன் "வல்வெட்டித்துறை ஆட்களாவது அந்த அம்மாவை இன்று வரை கொட்டிலில் அந்தரிக்க விடுவதாவது! எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அம்மா. ஒரு நாளும் நாங்கள் உதவி செய்ய வேண்டி வராது "என்றேன். கம்பர் மலையை வந்தடைந்து பண்டிதர் சிலையடி ஒழுங்கையால் திரும்பும் போது பார்த்தோம் பண்டிதர் சிலை உடைக்கப்பட்டு இருந்தாலும் கட்டடம் அப்படியே இருந்தது.


வீட்டை அடைந்தோம், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர்கள் ஐம்பது ஆண்டுகளாக இருந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு அயலில் உள்ள சிறிய காணியில் கொட்டில் அமைத்து எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பாண் வாங்கி தருவதற்கு கூட யாருமே இல்லாமல் புற்று நோயுடன் போராடும் மகனுடனும் மருமகளுடனும் கண்ணீர் சிந்திய படி இருந்தார். " எங்களை யாருமே கண்டு கொள்கிறார்கள் இல்லை.

முன்னர் எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்களின் வீட்டை போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி சிறிலங்கா பொலிஸ் எரித்து அழிச்ச போது எவ்வளவு பேர் ஓடி ஓடி வந்து உதவி செய்தார்கள் இப்ப என்ன நடந்தது என்று கேட்க கூட நாதியற்று இருக்கிறோம். அப்போது மகனும் மகனின் நண்பர்கள் பொட்டு, சூசை, பிரபாகரன், லாலா, கிட்டு என எல்லாரும் இருந்ததால் உதவி செய்தார்களோ தெரியாது. இப்ப அவர்கள் இல்லை என்று தான் கண்டு கொள்ளவில்லையோ எல்லாம் கெட்ட சனம் எல்லாரும் மாறி போய் விட்டார்கள் " "என்றார்.

அப்போது பார்த்திபன் வரும் போது நான் கூறியதைக் அவருக்கு கூற இன்னும் கூடுதலாக கண்ணீர் வடித்தபடி "எல்லாம் தலை விதி பிரபாகரனின் பிறந்த மண்ணில் எனக்கு இந்த நிலை.

மூத்த மகனையும் 2006 இல் உதவி செய்ததாக சுட்டுப் போட்டார்கள்.இப்போ இருக்கிற ஒரே மகனுடன் தான் வாழ்கிறன் அவனும் தொண்டையில் புற்று நோயால் கஷ்டப்படுரான். பிச்சைச் சம்பளம் தான் ஒரே நிரந்தர வருமானம். இயக்கத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்க வில்லை. ஆனால் இன்று மற்றவர்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள். எங்களுக்கு ஏன் இந்த நிலை" என்றார்.

மேலும் இந்த வீட்டில் இருந்து தான் ஆரம்ப காலங்களில் போராட்டத்தை தொடங்கினவை. ஏழெட்டு பெடியல் மாறி மாறி இருப்பார்கள் அன்ரியும் (அடேல் பாலசிங்கம் ) எங்கடை வீட்டைப் பற்றி எழுதி உள்ளார்.. அவங்களை தேடி பஸ்தியாம்பிள்ளை இன்ஸ்பெக்டர் வந்து அட்டகாசம் செய்து போட்டு நெஞ்சில் துப்பாக்கியை வைத்து உன்னை சுட்டுக் கொள்ளுவன் எங்கே எல்லாரும் என கேட்டு வெருட்டிய போதும் நான் ஒன்றும் சொல்லலை. என்னை சுட துப்பாக்கி தூக்கினவனை தம்பியாக்கள் கொஞ்ச நாளிலை அனுப்பி போட்டார்கள் என வீர பிரதாபங்களை சொல்லும் போது புல்லரித்துப் போனோம். (வீடியோ நாளை பதிவு செய்கிறேன்) 80 வயது ஆகிட்டு இனி என்ன 2009 ஆண்டு முள்ளிவாய்காலில் இருந்து மீண்டு வந்தோம் ஆனால் இன்னும் துன்பம் போகவில்லை. என விரக்தியுடன் கூறி வழியனுப்பி வைத்தார்.

உண்மை தான் போராட்டத்தோடு ஊறி திளைத்தவர்கள் வாழ்வதற்காக இன்றும் போராட, பின்னால திரிஞ்சதுகள் கொஞ்சம்............
தாங்க முடியலை...

எது எப்படியோ நம்ம நண்பர்கள் JCC96 திரு ரங்கன், திரு.சுரேஸ் (அல்லா) மற்றும் jcc 96இணைந்து மூன்று இலட்சத்திற்கு மேற்ப்பட்ட நிதியில் அரை நிரந்தர வீடு, அதற்கான மலசல கூடம், கிணறு, மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை யாழ் எய்ட் ஊடாக ஏற்படுத்தி கொடுக்க முன் வந்துள்ளனர்.

நன்றி-


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com