தமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்!

தமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார்! 

உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம்! 

போர் நடைபெற்ற போது வன்னிக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசான்களில் ஒருவராகிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் என்றழைக்கப்படும் மு.செ.குமாரசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று சாவடைந்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக இருந்த திரு.தமிழேந்தி அவர்களுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை வன்னியில் பல்வேறு மொழிச் செம்மைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் பெருமளவான போராளிகளுக்கு தமிழ் கற்பித்திருந்தார். அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டின் நெல்லை ஆழ்வார் குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ் அறிவோம்” என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

பாளையங் கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம், "தமிழிசை பாவாணர்" என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில், "பைந்தமிழ் பகலவன்" என்ற பட்டத்தையும் வழங்கி மதிப்பளித்துள்ளன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com