தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா! கொரோனோவுக்கு மருந்தாகும் தமிழர் ரசம்!

தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா! கொரோனோவுக்கு மருந்தாகும் தமிழர் ரசம்! 

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.

நோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும் ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.

கொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

 இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. நோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு, மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில் சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது.

குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின் உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.

யுடியூப் வலைத் தளங்களிலும் பல்வேறு வகையான ரசம் வைப்பது எப்படி என தேடி வருவதும் அதிகரித்து வருகிறது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com