காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் சாவடைந்துள்ளார்!

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் சாவடைந்துள்ளார்! 

 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த தாயார் பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி அவர்கள் (04/03/2020 இன்று) புதன் கிழமை சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து நூற்று பதினொரு நாட்களை (1111) எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி அவர்கள் தெரிவித்திருந்தார். 

தாயாரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் நாளை 05.03.2020 வியாழக்கிழமை 12.00 மணிக்கு நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com