தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமத்திரன் தேவையா தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தேவையா. முடிவு வாக்களிக்கப் போகும் மக்களிடம்.
சுமந்திரனின் கருத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கண்டனங்களை தெரியபடுத்துகிறார்கள். அதில் இருவரை முக்கியத்துவ படுத்துகிறேன், ஆயுத ரீதியில் போராடிய செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சித்தார்த்தன், அவர்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர்கள். மீண்டும் இவர்கள் வெற்றியடைய வேண்டுமென்றால், அதே கட்சியில் இருப்பில் இருக்க வேண்டிய ஒரு தேவை உள்ளது. அந்தக் கட்சியில் இருந்து தனித்து பிரிந்து சென்று தங்கள் அமைப்பை மக்கள் முன் கொண்டு செல்ல முடியாது எந்த சந்தர்ப்பத்திலும் அதை நன்கு புரிந்தவர்கள் இருவரும். வெறுமனே ஒரு கண்டன அறிக்கையை விட்டுவிட்டு அமைதியாக இருந்து கொள்வார்கள் அவர்களின் எதிர்கால அரசியல் இருப்புக்காக.
மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சித் தலைவர் அவரும் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதுவும் வெறும் உணவுத் தட்டில் இருக்கும் ஈ ஒன்றை கலைத்துவிட்டு உணவை உண்பது போல்.
சம்பந்தன் அவர்களுக்கு சொல்லவே தேவையில்லை. தன்னை விட வா இவன் அதிகம் விமர்சித்து விட்டான் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். அவரும் ஒரு அறிக்கை, அவரின் தனிப்பட்ட கருத்து என்ற ஒரு அறிக்கை.
இவர் உட்பட அதிகமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்றுவரை கூறுகிறார்கள் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என்று. ஒரு சில உறுப்பினர்கள் பட்டும் படாதது போல் கூறுகிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா..
நான் எனது தந்தைக்கு பிறக்கவில்லை, என்று கூறுவதும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என்று கூறுவதும் ஒன்று தான் என்னை பொருத்தவரை.
ஒட்டு மொத்தத்தில் கூட்டமைப்பால் எந்த ஒரு திடகாத்திரமான முடிவும் எடுக்க முடியாது சுமந்திரன் மீது. ஆகவே எனது கேள்வியை மக்களாகிய உங்களிடம் இளையோர் சமூகத்திடமும் வைக்கிறேன்.
எமக்கான அரசியல் தலைமை யார் என்பதை தெரிவு செய்ய வேண்டியது நீங்கள் நிராகரிக்க வேண்டியது நீங்கள். வெறுமனே உணர்ச்சி அரசியலில் மூலம் இளைய சமுதாயத்தையும் மக்களையும் சீரழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது தொடர்ச்சியாக.
அரசியலின் தேவை என்ன, மக்களின் தேவை என்ன என்பது தெரியாது. வெறுமனே விமர்சன அரசியலின் ஊடாக காலத்தை கடத்தி செல்லும் இந்த அரசியல் தலைமைகள் தேவையா என்பது உங்கள் கையில். நினைவில் கொள்ளுங்கள் எமது இனத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து உயிர்களையும். அதன்பால் பாதிக்கப்பட்ட உறவுகளையும்.
தவறுகள் தெரிந்தும் தண்டிக்க முடியாத நிலைமையில் இன்று தமிழர்கள். ஆனால் எம்மை திருத்திக்கொண்டு பயணிப்பதற்கு எமக்கு காலங்கள் உண்டு சந்தர்ப்பங்களும் உண்டு.
எனது கருத்து சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றைய உறவுகளும் புரிந்து கொள்ளட்டும்.
அன்புடன்,
அரசியல் சாணக்கியன்..