இது முள்ளிவாய்க்கால் மண்ணில் வலிகளை சுமந்த உப்பு கஞ்சி.


இது முள்ளிவாய்க்கால் மண்ணில் வலிகளை சுமந்த உப்பு கஞ்சி. ஆனால் நான் உப்பு போடாமல் கஞ்சி செய்து உள்ளேன் அதன் காரணத்தை எனது பதிவில் இறுதியில் குறிப்பிடுகிறேன்.

உறவுகளே மன்னிக்க வேண்டும், இது முற்று முழுதாக வலிகளை உணர்ந்த நான் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எமது இனத்திற்காக.

நாம் அன்று முள்ளிவாய்க்காலில் ஒரு சொட்டு கஞ்சிக்காக வயது வித்தியாசமின்றி கையேந்தினோம், குண்டு மழைக்கு மத்தியில். அது பசிக்கான கஞ்சி அல்ல உயிர் வாழ்வதற்கான கஞ்சி. உயிர் வாழ்வதற்கான கஞ்சி வேண்டச் சென்று உயிரிழந்தவர்கள் அதிகமானவர்கள் சிந்தித்து பாருங்கள் எமது மரணத்தின் கடைசி தருணங்கள்.

சிங்களதேசம் கொன்று குவித்தது ச,ர்வதேசம் வேடிக்கை பார்த்தது அன்று. தமிழினம் செத்து மடிந்தது ஒவ்வொரு நொடிப் பொழுதும்.

பசியோடு இருப்பவனுக்கு உணவைத்தான் வழங்க நீங்கள் முன்வரவில்லை, எமது உயிர்களை யாவது விட்டு வைத்திருக்கலாமே. கஞ்சி குடித்து உயிர் வாழத்தானே விரும்பினோம் இந்த பூமிப்பந்தில் நாங்களும். வயது முதிர்ந்த அவர்களை கொன்றொழித்து மழலைகள் பாலகர்களை வாழ, விட்டிருக்கலாமே.

எதற்காக இந்த இரக்கமற்ற இன அழிப்பு நமக்கு. குளத்தில் இருக்கும் முதலையை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி குளத்தில் வாழ்ந்த அனைத்து உயிர்களையும் கொன்றொழித்தது தானே உங்களின் இரக்கமற்ற வரலாறு.

நீங்கள் எப்படித் தான் என்னதான் செய்தாலும். தமிழ் மக்களில் தமிழினத்தை நேசித்த மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியாது. காரணம், கடந்த வரலாறுகள் இன்றும் கடத்தப்படுகிறது எமது இளைய சமுதாயத்திற்கு. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வுகள் ஊடாக. உங்களின் பாதக செயலுக்கு யார் தீர்ப்புத் தருவார்கள் என்று தெரியவில்லை, எமக்கும் தீர்வு இல்லாதது போல் உங்களின் இரக்கமற்ற செயலுக்கும் தீர்ப்பு இல்லை இந்தப் பூமிப்பந்தில்.

இப்பொழுது கூறுகிறேன் நான் ஏன் உப்பு போடாமல் கஞ்சி செய்தேன் என்று.(உப்பில்லா பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள்) ஆனால் இந்தக் கஞ்சியை நான் இன்று முழுவதும் அருந்துவேன் காரணம் வலிகளை சுமந்த அந்த நினைவுகள்.

உப்பில்லா பண்டம்  குப்பையில் அதுபோல்தான் இன்று எமது மக்களை வைத்து இருக்கிறார்கள் இன்றைய அரசியல் தலைமைகள். இந்தப் பதிவை எழுதும் இந்த தருணம் வரை முள்ளிவாய்க்காலில் கஞ்சி குடித்த மக்கள் இன்றும் கஞ்சி குடிக்கிறார்கள் வடக்கு கிழக்கில்.

உப்பு போட்டு சாப்பிட்டு நாம் எதை  சாதித்தோம் இதுவரை.அல்லது இனிமேல் எதை சாதிக்கப் போகிறோம் எமது மக்கள் சார்ந்தது..

நாம் அன்று கஞ்சி குடித்த பொழுது எம்மை வேடிக்கை பார்த்தவர்கள்
எமது அழிவுகளை கண்டு களித்தவர்கள் காத்திருந்தவர்கள் தான் இன்று எம்மை ஆளுகிறார்கள் ஆளத் துடிக்கிறார்கள்.

எனது தந்தை என்னை திட்டுவார் எனது சிறுவயதில். நீ உப்பு போட்டுத் தானே சாப்பிடுகிறார், உனக்கு ரோசம் சூடு சொரணை எதுவுமே இல்லையா நா,னும் எத்தனை முறை உனக்கு சொல்கிறேன் இந்த அரசியல் கிருசியல் எல்லாத்தையும் விட்டுட்டு உன் வாழ்க்கையை பார் என்று.
அதேபோல் தான்  இன்று வாக்களிக்கும்  மக்களும் இருக்கிறார்கள். நான் மட்டுமல்ல எத்தனையோ அரசியல் தெரிந்த புத்திஜீவிகள் ஒவ்வொரு விதமாக சமூக வலைத்தளங்கள் ஆக இருக்கட்டும் ஊடகங்களாக இருக்கட்டும் எந்தெந்த வழிமுறைகளில் மக்களுக்கான அரசியலை தெளிவுபடுத்த முடியுமோ, தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம், இன்றைய அரசியல் தலைமைகளிடம் இருந்து எமது தமிழ் மக்களை எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று.

நானும் அதைத்தான் விரும்புகிறேன், எனது முகநூல் உறவுகளே, இளையோர்களை மாற்றத்தை எதிர்பார்க்கும் அரசியல் சிந்தனை கொண்ட ஒவ்வொருவரையும் உறவுகளையும்.

தவறான அரசியல் தலைமைகளை திட்டுவதற்கு எனக்கு எழுத்துக்கள்  இலகுவாக வரும். ஆனால் எனது மக்களை திட்டுவதற்கு என்றுமே எனது எழுத்துக்கள் வடிவம் பெறுவது இல்லை. இன்றும் மக்களை நேசிக்கும் ஒருவனாகவே இருக்கிறேன்.

எனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றைய உறவுகளும் புரிந்து கொள்ளட்டும்...

அன்புடன்
அரசியல் சாணக்கியன்.

குறிப்பு. நான் அதிக காலமாக சமைத்தது இல்லை. இப்பொழுதும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் எனக்கு உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் வந்து போவார் கள். எனது உடல் நிலையும் சரி இல்லாவிட்டாலும், இந்த உப்பில்லாத கஞ்சியை கடந்த கால வலியை சுமந்து நானே தயாரித்து நானே உண்டு முடிக்கிறேன். எனது வலிகளை மேலும் வலிமைப்படுத்த அது முற்று முழுதாக எமது இனத்துக்காக.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com