வரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்!!!

முள்ளிவாய்க்கால் முடிவின் பின் தொடர்ந்து 11 வருடங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் திமுக வினர் புலிகளையும், எமது விடுதலைப் போராட்டதையும், தலைவரையும் அசிங்கமாக சித்தரித்து உண்மைக்கு புறம்பான விஷக்கருத்துக்களை விதைப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு பக்கபலமாக மாற்று இயக்கத்தை சேர்ந்த ஒட்டுண்ணிகளும், பெண், நிதி மோசடிகளில் ஈடுபட்டு அமைப்பை விட்டு துரத்தப்பட்டவர்களும் பக்கவாத்தியம் பாடுகின்றனர். இவர்களில் சிலர் போர்த்தியிருப்பது புலிசார்பு போர்வை. ஆனால் விதைப்பதோ புலியெதிர்ப்பு விஷங்களை.

 தி.மு.க முன்னிலைப்படுத்தும் ஒரு குற்றச்சாட்டு "இந்தியா தான் புலிகளை வளர்த்து விட்டது" இந்திய அரசின் உதவி இல்லாது போயிருந்தால் புலிகளால் இவ்வளவு தூரம் போர் உத்திகளில் வளர்ந்திருக்க முடியுமா.? என வரலாற்றை மாற்ற முற்படுகின்றனர்.

ஒரு கைதுப்பாக்கியுடன் (3.8 revolver) தலைவர் ஆரம்பித்த புலிகள் அமைப்பு, முப்படை உருவாக்கம் கண்டு, பல் குழல் எறிகணை செலுத்தியை சொந்தமாக உருவாக்கும் அளவுக்கு தம்மை இராணுவ ரீதியாக வளர்த்திருந்தனர்.

1983ம் ஆண்டு இறுதியில் தான் இந்திய அரசு பயிற்சி நிரலுக்குள் புலிகளை உள்வாங்கியிருந்தது. புலிகளுக்கு முன்னமே டெலோ, EPRLF, புளொட் போன்ற தேசவி ரோதிகளுக்கு பயிற்சியும் கொடுத்து கணக்கு வழக்கின்றி ஆயுதங்களையும் கொடுத்திருந்தது. கண்துடைப்புக்கு தான் சிறுதொகை பின்தங்கிய ஆயுதங்களை புலிகளுக்கு கொடுத்து, பயிற்சியும் கொடுத்தது இந்திய அரசு. அதற்கு காரணம் புலிகள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக இருந்தது.

ஈழவிடுதலை இயக்கங்கள் தங்கள் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்கான பொறி தான் இந்த பயிற்சிகள். மற்றைய இயக்கங்கள் இது தெரியாமல் இந்திய அரசின் நயவஞ்சகத்திற்கு பலியாகி தம்மை அழித்துக்கொண்டனர்.

இந்திய தம்மை ஏமாற்றுவதை ஊகித்த தலைவர், தான் ஏமார்ந்தது போலவே நடித்தபடி புலிகளை வளர்த்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் 1983 தொடக்கம் 1986 வரை மூண்று இடங்களில் 10 பயிற்சிகள் நடந்தன. அதில் முதல் இரண்டு மட்டும் தான் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முன்னமே 70களில் பண்ணைகளில் வைத்து தலைவரால் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒரு கெரில்லா அமைப்பாக புலிகள் தங்களை வளர்த்திருந்தனர்.

இந்திய அரசின் பயிற்சியின் பின், இந்திய அரசுக்கு தெரியாமல் புதிய பெண், ஆண் போராளிகளுக்கு M-16 மற்றும், AK-MS (இந்தவகை ஆயுதம் புலிகளிடம் மட்டுமே இருந்தது) துப்பாக்கிகளும் பெரும் தொகையில் கடலால் கொண்டுவரப்பட்டு, புலிகள் ஆயுத ரீதியாகவும் தம்மை பலப்படுத்தினர். (கீழே படத்தை பாருங்கள்) அன்றைய புலிகளின் போர் வளர்ச்சிக்கு சிறு உதாரணம் திருநெல்வேலி பதுங்கி தாக்குதலாகும்.

இந்த சண்டையின் போது தலைவர் அன்றைய காலத்தில் நவீன G3 A3 ( ஜெர்மன் துப்பாக்கியின் பாக்கிஸ்தானிய பிரதித் தயாரிப்பு) துப்பாக்கியை வைத்து 7 சிங்கள இராணுவத்தினரை அவர் மட்டும் சுட்டு கொன்றிருந்தார்.

எந்த நாட்டின் பயிற்சியோ அல்லது, ஆயுத உதவியோ இல்லாமல் எதிரியிடம் சிறுக, சிறுக பறித்த ஆயுதங்கள் கொண்டே, இந்தியா பயிற்சி தருவதற்கு முன்னமே இந்த தாக்குதல் வெற்றிகரமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் தான் இந்திய அரசு தங்கள் பூகோள நலனுக்காக எமக்கு உதவ முன் வந்தது .

இதை நன்கு உணர்ந்த தலைவர் இந்திய அரசுடன் தாமரை இல்லை தண்ணி போல தான் உறவைப் பேணினார். இதுக்கு ஒரு இன்னொரு உதாரணம் சொல்ல முடியும். முதல் அணி பயிற்சி நிறைவு செய்தபின் இந்திய இராணுவ மேஜர் தர அதிகாரி பிரியாவிடை பெற்று செல்லும் போது, கிட்டண்ணை அவரது பிரிவு தாங்காது கதறி அழுதாராம். அதை பின்னர் கேள்விப்பட்ட தலைவர் கிட்டண்ணையை சந்திக்கும் போது, "இந்திய அரசின் கபட நோக்கத்தை தெளிவுபடுத்தி, கூடிய விரைவில் இதே இந்திய அரசுடன் நீ போர் புரியவேண்டி வரும்" அதனால் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதே என்று அண்ணை கடிந்துள்ளார்.

அண்ணையின் தீர்க்க தரிசனம் 1987 இந்திய இராணுவத்துடன் போர் நடந்த போது தான் தலைவரை நினைத்து வியர்ந்ததை, பின்னைய நாளில் காட்டில் இருக்கும் போது இளம் போராளிகளுக்கு கிட்டண்ணை கூற தவறவில்லை. 

புலிகள் அமைப்பு யார் உதவியும் இல்லாமல் அனுபங்களின் ஊடாக வளர்ந்த அமைப்பு.

1996இல் முதல் முதலாக முல்லைத்தீவில் ஆட்லறிகள் எடுத்த போது அதை எப்பிடி இயக்குவதென்றே தெரியாமல் இருந்த புலிகள் தான், பின்னைய நாளில் "லாண்டிங் பொசிசனில்" வைத்து, உடைக்க முடியாத காவலரண்களையும், நகரும் வாகனங்கள், போர் கப்பல்கள் என பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்த இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கி அழித்தனர்.

புலிகள் இப்படித்தான் வளர்ந்தனர், தங்களை வளர்த்துக் கொண்டனர். கூலிக்கு மாரடிக்கும் (தி.மு.க உ.பி கள்) உங்களால் ஒரு போதும் வரலாற்றை மாற்ற முடியாது.!

 நன்றி:
முச்சந்தி முரளி!

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com