இலங்கை அரசு நடத்திய இனவழிப்பு படுகொலைகள் சில!


இலங்கை அரச பயங்கரவாதம் இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.

இலங்கை அரசப் பயங்கரவாதம் எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்துதல், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுதல், சட்டத்திற்கு புறம்பான, சித்திரவதைகளுக்கு தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் புரிந்து, மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை மீறுதல், தமது நாட்டு பொது மக்களை படுகொலை செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை இனவழிப்பு செய்தல், போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து வருவதால், இலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் ஆகும்.

இலங்கை அரசு முன்னெடுத்ததாக குற்றஞ் சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் இலங்கை அரச பயங்கரவாதம் எனப்படுகிறது.

இனப் படுகொலைகள், ஆட் கடத்தல், கட்டாய வெளியேற்றம், சித்ரவதை, நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபானமை இன ஈழத்தமிழர்கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1- கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்,


1987 கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது, இறால் பண்ணைப் படுகொலைகள், 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடத்தப்பட்டது.

2- பிந்துனுவேவா படுகொலைகள்.Bindunuwewa massacre 

பிந்துனுவேவா படுகொலைகள் Bindunuwewa massacre அல்லது பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள் என்பது அக்டோபர். 25. 2000ம் ஆண்டில் இலங்கையில் மத்திய மாகாணத்தில் பிந்துனுவேவா என்ற இடத்தில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் 27 பேர் சிங்கள கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
இத்தாக்குதலால் மேலும் 14 பேர் காயமடைந்தனர். 

3-வல்வை நூலகப் படுகொலைகள்.


1985 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் அல்லது, வல்வை நூலகப் படுகொலைகள் (1985 Valvettiturai massacre) என்பது 1985 மே 12 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை நூலகத்தில் சுமார் 70 தமிழ்ப் பொது மக்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொதுமக்கள் நகர நூலகத்துக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் நூலகம் இராணுவத்தினரால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலகத்தினுள் இருந்த அனைத்துப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

4- 1956 கல்லோயா படுகொலைகள்.

கல்லோயா கலவரம் அல்லது, கல்லோயா படுகொலைகள். என்பது இலங்கை விடுதலை பெற்ற பின்னர் இடம்பெற்ற சிறுபான்மை தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித் தாக்குதல் ஆகும்.

கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும் பான்மையின சிங்களக் குடியேற்ற வாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத் திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து, அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர்.

150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது. 100 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.தொடக்கத்தில் பாரா முகமாக இருந்த காவல் துறையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

5- உடும்பன்குளம் படுகொலைகள் 1986,


உடும்பன்குளம் படுகொலைகள் அல்லது, அக்கரைப்பற்று படுகொலைகள் 1986 பெப்ரவரி 19 இல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு அருகாமையில் உள்ள உடும்பன் குளம் என்ற சிறு வேளாண்மைக் கிராமத்தில் இடம்பெற்றன.

ஏறத்தாழ 80 இலங்கைத் தமிழ் வேளாண்மை மக்கள் இலங்கை படைத் துறையினர் எனச் சந்தேகிக்கப் படுவோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப் படுகொலைகள் பெப்ரவரி 19 இடம்பெற்றிருந்தாலும், இது பற்றிய தகவல்கள் சில நாட்களுக்குப் பின்னர் இக்கிராமத்திற்கு சென்றிருந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மூலம் தெரிய வந்தது.

இவர்களின் கூற்றுப்படி, நெல் வயல்களில் வேளாண்மையில் (சூடடிப்பில்) ஈடுபட்டிருந்தோர் மீது திடீரென அங்கு வந்த இலங்கைப் படையினர் வானை நோக்கிச் சுட ஆரம்பித்தனர், பெண்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கிருந்த ஆண்களின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு தரையில் அமர விடப்பட்டனர்.

இவர்கள் பின்னர் நெல் வயல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் அங்கிருந்த வைக்கோல் குவியல்களுடன் போடப்பட்டு எரிக்கப்பட்டன.

வயலில் பல துப்பாக்கிச் சன்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 முதல் 103 வரை எனத் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

6- கல்லோயா படுகொலைகள். 


கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் என்பது விடுதலை பெற்ற பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இன வெறித் தாக்குதல் ஆகும்.

7- கிழக்குப் பல்கலைக் கழகப் படுகொலைகள், 1990 

கிழக்குப் பல்கலைக் கழகப் படுகொலைகள் அல்லது, வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக், கைது செய்யப்பட்டுப், பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்ட விரோதக் கைது, மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது.

அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

 8- குமுதினி படகுப் படுகொலைகள், 1985


குமுதினிப் படுகொலைகள் அல்லது, குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும், புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து, நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற் படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும், வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப் பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற் படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

9- வட்டக் கண்டல் படுகொலைகள்.

வட்டக் கண்டல் படுகொலைகள் எனப்படுவது இலங்கை, மன்னார் மாவட்டத்தில் உள்ள வண்டக் கண்டல் என்ற ஊரில் 1985 ம் ஆண்டு சனவரி 30 திகதி இலங்கைப் படைத் துறையினர் நேரடியாக தாக்கியதிலும், வானூர்திகள் மூலம் தாக்கியதிலும், ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பதினெட்டுப் பேரும் அடங்குவர்.

10- 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்.


1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1989 Valvettiturai massacre) இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் கரையோர நகரான வல்வெட்டித்துறையில் 1989 ஓகஸ்ற் மாதம் 2 முதல் 3 வரை இடம்பெற்றன.

இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இப் படுகொலைகளில் குறைந்தது 64 இலங்கைத் தமிழர் கொல்லப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு அதிகாரி உட்பட ஆறு இராணுவத்தினரைக் கொன்றதை அடுத்து, இப் படுகொலைகள் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் சிக்கியே பொதுமக்கள் இறந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ரீட்டா செபஸ்தியான் (இந்தியன் எக்ஸ்பிரசு), டேவிட் உசேகோ (பைனான்சியல் டைம்ஸ்) மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன நேரில் கண்டவர்களின் சாட்சியத்தைக் கொண்டு இவை பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், படுகொலைகளும் என உறுதிப்படுத்தினர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பின்னர் பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்படுகொலைகளை இந்தியாவின் மை லாய் என வர்ணித்தார்.

11- களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்.


களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் டிசம்பர் 12, 1997, இலங்கையில் களுத்துறை நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றன. மூன்று இலங்கைத் தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.

இப்படுகொலைகள் இடம்பெற்ற வேளை இச்சிறைச்சாலையில் மொத்தம் 137 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் டிசம்பர் 12 ம் தேதி பி.ப 1:00 மணிக்கு வார்ட் D ற்கு முன்பாக சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இச் சம்பவம் நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களே வார்ட் D ஐத் திறந்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் முன்னாலேயே தமிழர்கள் மூவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் எனவும் தப்பியவர்களின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

12- செட்டிக்குளம் படுகொலைகள்.1984 டிசம்பர் 2 அன்று செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதிகாலை 05:30 மணியளவில் செட்டிக்குளம் பகுதியை இராணுவம் சுற்றி வளைத்தது.

கிராமத்தின் பெரும் பான்மையானோர் இன்னமும் உறக்கத்தில் இருந்தனர். இராணுவத்தினர் வீடுகளில் புகுந்து ஆண்கள் அனைவரையும் விசாரணைக்கு எனக் கூட்டிச் சென்றனர். இவ்வாறாக 52 ஆண்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கொல்லப்பட்டனர்.

52 பேரும் அருகில் உள்ள மதவாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கத்திகளினால் குத்திக் கொல்லப்பட்டு வாகனங்களால் மிதிக்கப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

13- வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும்.

இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நடைபெற்று எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.

இப்படுகொலை இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன.

முதலாவது படுகொலைகள் ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும், வாள்களினாலும், பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது படுகொலைகள் இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது.

இவற்றில் A3, B3, C3, மற்றும் D3, என்பன சிறைச் சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3, மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாவர்.

A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள். இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்கு மூலத்தின் படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக் கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட முக்கிய தமிழ்த் தலைவர்கள் குட்டிமணி. தங்கத்துரை. ஜெகன்.

14- இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956

இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956, கொழும்பிலும் பிற இடங்களிலும் 150ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். ஜூன் 5, 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற் பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறையை தடுக்கப் பார்த்துக் கொண்டிருந்த காவற் துறையினர், கலவரத்தை தடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த வன்முறை பரவி கொழும்பிலும், பின்னர் பிற இடங்களிலும் 150 மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கை இனப் பிரச்சினையில் தமிழர், சிங்கள், இனங்களுக்கிடையான பிரிவு பின்னர் தீவிரமான வன்முறைகளுக்கு தூண்டுதலான முதல் கொடிய வன்முறை சம்பவம் எனலாம்.

இதில் மேல் வர்க்க தமிழர்களும் இன ரீதியில் தாக்கப்பட்டது அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திருப்பியது. இதன் காரணமாக பல கொழும்பு வாழ் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

15- மயிலந்தனைப் படுகொலைகள். Mylanthanai massacre


மயிலந்தனைப் படுகொலைகள் (Mylanthanai massacre) 1992 ஆம் ஆண்டு ஓகஸ்த் 9 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் இடம்பெற்றது. 50 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மயிலந்தனைப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பிற்குப் பயந்து பதுங்கச் சென்றவேளை, அங்கு பதுங்கியிருந்த சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் அப்பொதுமக்களை வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தனர். 1992.08.09 ஆம் திகதி நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 50 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை இராணுவ முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரே இப் படுகொலைகளை நிகழ்த்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது, ஆனாலும் கொழும்பு நீதிமன்றம் ஒன்றில் சான்றாயர் குழு ஒன்று இவர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்தது.

இறந்தவர்களின் உறவினர்கள் சார்பில் மேன் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

1992, ஓகஸ்த் 8 ஆம் நாள் சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டம், அராலித் துறையில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை ஓகஸ்த் 9 ஆம் நாள் இராணுவத்தினர் மயிலந்தனைத் தாக்குதலை நடத்தினர்.

இந்திரகலா சின்னத்துரை (வயது 28) என்பவரின் நேரடிச் சாட்சியத்தின் படி, இராணுவத்தினர் துப்பாக்கிகள், கத்திகள், மற்றும் கோடாலிகள் கொண்டு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலரைத் தாக்கிக் கொன்றனர். ஒரு வயதுக் குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டது. 35 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் மருத்துவமனையில் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.

16- இலங்கை அரச பயங்கரவாதம்.

இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.

இலங்கை அரசப் பயங்கரவாதம் எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்துதல், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுதல், சட்டத்திற்கு புறம்பான, சித்திரவதைகளுக்கு தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் புரிந்து, மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை மீறுதல், தமது நாட்டு பொது மக்களை படுகொலை செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை இனவழிப்பு செய்தல், போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து வருவதால், இலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் ஆகும்.

இலங்கை அரசு முன்னெடுத்ததாக குற்றஞ் சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் இலங்கை அரச பயங்கரவாதம் எனப்படுகிறது.

இனப் படுகொலைகள், ஆட் கடத்தல், கட்டாய வெளியேற்றம், சித்ரவதை, நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபானமை இன ஈழத்தமிழர்கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

17- மண்டைதீவுக் கடல் படுகொலைகள் (Mandaithivu sea massacre)


இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மண்டைதீவுக் கடற்பகுதியில் தமிழ் மக்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதல்கள் ஆகும். இதன் போது, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெரும்பாலும், குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

 மண்டைதீவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும். இது யாழ்ப்பாண நகருடன் சாலை வழியே இணைகின்றது.

1986 சூன் 10 ஆம் நாள் அன்று, குருநகர் துறையில் இருந்து தூயஒளி என்ற படகு மீனவர்களுடன் புறப்பட்டது. முகத்துவாரம் கலங்கரை விளக்கைத் தாண்டி மண்டைதீவுக் கடலில் மீனவர்கள் இறங்கினர்.

27 பேர் கரையிறங்க ஏனையோர் வலை வளைக்க ஆயத்தமாக படகில் இருந்தனர். இலங்கைக் கடற்படைச் சேர்ந்தவர்கள் கறுப்பு உடை அணிந்தவாறு கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அணுகினர்.

மீனவர்கள் தாம் பொது மக்கள் எனத் தெரிவிக்கும் பொருட்டு தமது கைகளை உயர்த்தினர். ஆனாலும், கடற் படையினர் மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர். மீனவர்களின் படகுகளையும் மீன் வலைகளையும் சேதப்படுத்தினர். அங்கிருந்த அனைத்து மீனவர்களையும் கோடரி, வாள், கத்தி, பொல்லாலும், துவக்குப் பிடியாலும், வெட்டியும் கொத்தியும், அடித்தும், சித்திரவதைக்கு உட்படுத்திப் படுகொலை செய்தனர்.

மீனவர்களின் கண்கள் குத்தப்பட்டுக் குழிகளாயின. சிலரது வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டிருந்தன. குருநகரைச் சேர்ந்த 30 மீனவர்களும், மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவரும் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

சேமோன் மரியதாஸ் (அகவை 41) என்ற ஒரேயொரு மீனவர் மட்டுமே உயிர் தப்பினார். கொல்லப்பட்ட மீனவர்கள் 13 முதல் 62 வயது வரையானவர்கள் ஆவர்.

18- 1984 மன்னார் படுகொலைகள்.


மன்னார் படுகொலைகள் 1984 டிசம்பர் 4 அன்று இலங்கையின் வடக்கே மன்னார் நகரில் இலங்கை இராணுவம் 107 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்யப்படட நிகழ்வாகும். மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் சிக்கியதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கு நடவடிக்கையாக இப்படுகொலைகள் இடம்பெற்றன.

மன்னார் மத்திய மருத்துவமனை, அஞ்சலகம், கத்தோலிக்க திருச்சபை மடம் ஆகிய இடங்களிலும், மற்றும் நெல் வயல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த விவசாயிகள், பேருந்துப் பயணிகள் மீது இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது.

மன்னார் நகரைச் சுற்றியுள்ள முருங்கன், பரப்பன் கடல் போன்ற கிராமங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத் தாக்குதல்களை அடுத்து, அன்றைய இலங்கை அரசுத் தலைவர் ஜெயவர்தனா விசாரணைக்காக சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.

இவ் ஆணைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் உள்ளூர் மதகுரு மேரி பஸ்டியான் 1985 சனவரியில் கொலை செய்யப்பட்டார். இப் படுகொலைகளுக்கு சாட்சியமளித்த மெதடிஸ்த மறைப் பரப்புனர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் 1984 டிசம்பரில் கொலை செய்யப்பட்டார்.

19- கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991

1991 கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (Kokkadichcholai massacre) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை என்ற ஊரில் தமிழ் மக்கள் மீது 1991 சூன் 12 அன்று நடத்தப்பட்டது.

இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவறி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது.

அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது.

கொழும்பில் நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையாக தமிழரும், சிறுபான்மை இனக்களாக சோனகர், சிங்களவர், பரங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர்.

1980களின் ஆரம்பம் முதல் 1990களின் ஆரம்பம் வரை ஏறத்தாழ 1,100 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.கொக்கட்டிச்சோலை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 1987, 1991 இல் நடந்த படுகொலைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com