தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின் இரா.சம்பந்தன் அவர்களின் சாணக்கிய அரசியல்..


இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணம், அதிகமானவர்கள் கூறுகிறார்கள்  "நீங்கள் மிகவும் சாணக்கிய தன்மையாக அரசியலை கொண்டு செல்வதாக அதில் ஆளுமையும் உங்களுக்கு இருக்கிறது" என்று.

சரி வருகிறேன் தற்போதைய உங்களின் சாணக்கிய அரசியல் எது என்று பார்ப்போம்.

ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த போது தான், இறுதியாக 1977ஆம் ஆண்டு தான் உங்களை தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தெரிவு செய்தார்கள் வாக்களித்து. அதன் பின் எந்த வித தேர்தலின் போதும் மக்கள் உங்களை தெரிவு செய்யவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை, உங்கள் அரசியல் தலைமையை.

25 வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்க்கை அற்று வெறுமனே ஒரு நடைபிண அரசியல் வாதியாக, இலங்கை அரசுடன் வாழ்க்கையை ஓட்டிய உங்களுக்கு, மீண்டும் உங்களின் அரசியல் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தார்கள் விடுதலைப் புலிகள். நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களின் தற்போதைய அரசியல் வாழ்க்கைக்கு, உங்களுக்கு மட்டுமல்ல, இன்னும் கூட்டமைப்பில் அதிகமான உறுப்பினர்களுக்கும் தான் என்பதை.

நீண்ட காலங்களின் பின் கிளிநொச்சியில் உங்களைச் சந்தித்தேன். அப்பொழுது நீங்கள் நகைச் சுவையாக கூறிய வார்த்தை, சொந்தத் தொகுதியில் கூட என்னை மக்கள் மதிக்கிறார்கள் இல்லை நாய்க்கு சமனாக. அப்பொழுது தான் ஆரம்பித்தது உங்களின் சாணக்கிய அரசியல்.

விடுதலைப் புலிகளால் இலக்கு வைக்கப்பட்ட ஒருவர் நீங்கள் என்று தெரிந்தும். உயிர் போனாலும் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடு நடுக்கத்துடன் வன்னிக்கு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டதில் உங்களின் சாணக்கிய தன்மையை கண்டு கொண்டேன்.

காலங்கள் உருண்டோடி, முள்ளி வாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பொழுது, தொடர்பு கொள்ள முடியாத தமிழ் மக்களின் அரசியல் தலைவனாக இருந்தீர்கள். நீங்கள் தொலைக் காட்சியின் முன் இருந்து, முள்ளி வாய்க்கால் முடிவையும், விடுதலைப் புலிகளின் முடிவையும் அறிந்து கொள்வதில் இருந்த ஆர்வம், அன்று எங்கள் மக்களைக் காப்பாற்றுவதில் இருந்ததில்லை.

போர் முடிந்ததும் பாராளு மன்றத்தில் போரை முடித்த மகிந்தவுக்காக புகழ் பாடிய உங்களின் சாணக்கிய தன்மையை புரிந்து கொண்டேன். தமிழினம் இனம் அழிக்கப்பட்ட பொழுதும்.

உங்கள் வீடு தேடி அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்து வந்த முன்னாள் போராளிகள் வைத்த கோரிக்கையை அலட்சியப் செய்து, அவர்களின் கருத்துக்களையும் அலட்சிய செய்து, பத்திரிகை வாசித்துக் கொண்டு இருந்தீர்கள் என்று தான் எண்ணினேன். நீங்களோ, பத்திரிகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை தேடினீர்கள் அப்பொழுது கண்டேன், உங்களின் சாணக்கிய தன்மையை..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாழ்ப்பாணத்தில் உங்கள் வாகனத்தை மறித்து, உறவுகளை கேட்ட பொழுது, வாகனத்தின் கண்ணாடியை மூடிவிட்டு வாகனத்துக்குள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடினீர்கள், அங்கே கண்டு கொண்டேன், உங்களின் சாணக்கிய தன்மையை...

தங்கள் காணிகளை விடுவிக்க சொல்லி நாட்கணக்காக மக்கள் போராடிய பொழுது. நீங்கள் உங்கள் சொந்த வீட்டை விட எதிர்க்கட்சிப் பதவிக்குத் தரப்பட்ட சொகுசு பங்களாவுக்காக நிற்க முடியாத வயதிலும், எழுந்து ஆக்ரோஷமாக பாராளு மன்றத்தில் குரல் கொடுத்த பொழுது கண்டு கொண்டேன், உங்களின் சாணக்கிய தன்மையை.

இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்காக, விட்டுக் கொடுப்புகளையும், கால அவகாசம்களையும், பெற்றுக் கொடுத்து உங்கள் வங்கிக் கணக்கை நிரப்பிய பொழுது கண்டு கொண்டேன், உங்களின் சாணக்கிய தன்மையை.

தீபாவளிக்கும், தைப் பொங்கலுக்கும், தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று தமிழ் மக்களுக்கு வாழ்த்துடன் அறைகூவல் விடுக்கும் பொழுது, கண்டு கொண்டேன், உங்களின் சாணக்கிய அரசியலை.

இப்படி அதிகமாக இருக்கின்றது உங்களின் சாணக்கிய அரசியல் வரலாறு. இப்படித் தான் இந்த சாணக்கியன் உங்களின் சாணக்கிய அரசியலை பார்க்கிறேன்.

ஏற்றுக் கொள்கிறேன், என்னை விட நீங்கள் சாணக்கியர் அரசியலில். ஆனால், எனது கேள்வி? நீங்கள் மக்களுக்கான சாணக்கிய அரசியல் செய்கிறீர்களா? அல்லது, உங்களின் தனிப்பட்ட சாணக்கிய அரசியல் செய்கிறீர்களா? நான் இங்கே குறிப்பிட்டுக் கூறிய உங்களின் சாணக்கிய அரசியல் அனைத்தும் ஆதார பூர்வமானவை.

இன்று, இவர் ஒரு சாணக்கிய அரசியல் தலைமை என்று பின் தொடர்ந்து செல்லும் அரசியல் தலைமைகளும், நீங்களும், மக்களை ஏமாற்றும் இந்த சாணக்கியரின் வாரிசுகள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இறுதியாக இன்று உங்களின் கூட்டமைப்பின் தொண்டர்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன். பதிவுகள் ஊடாக, அவர்களாக அதிகாரத்தை கையில் எடுக்கும் முன் அதிகாரத்தை ஒப்படைத்து அழகு பார்க்கலாம் நீங்கள்.

இன்று வரை கூட்டமைப்பை ஆதரிக்கும் தொண்டர்களின் நிலைமை. எப்படி ஒரு தந்தை கை காட்டிய பாதையில் மகன் ஒருவர் பயணத்தை மேற் கொள்கிறானோ, அது போல் தான், அவர்கள் இன்று எண்ணுகிறார்கள். உங்களின் அமைப்பை உருவாக்கி விட்ட அந்தத் தலைமை மீது இருந்த பற்று தான், இன்று உங்களைக் கொண்டு செல்கிறது. ஆனால், இது இனி நிரந்தரமாக இருக்காது, இருக்கப் போவம் இல்லை.

எனது கருத்து சரி என்று பட்டால் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றைய உறவுகளும் புரிந்து கொள்ளட்டும்.

அன்புடன்,
அரசியல் சாணக்கியன்,
Manikam Sinnathambi. 
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com