யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி- தி.திபாகரன்

1950களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர் இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின் விடாமுயற்சியினால் இந்தியாவின் நூலகர் எஸ்.ஆர் இரங்கநாதன் (நூலகவியலின் தந்தை என போற்றப்டுபவர்) அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து நூலகத்துறையில் அவரது முகாமைத்துவத் திறனை பயன்படுத்தி நூலக அமைப்பிற்கான புர்வாங்க திட்டவரைபுகள் வரையப்பட்டது. அவரது பரிந்துரைக்கமைய தமிழக அரசின் கட்டடக்கலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் அவர்கள் யாழ்நுாலக கட்டடக்கலை நிர்மானியாக நியமிக்கப்பட்டார்.

அன்றையநாட்களின் அரசியல் தலையீட்டினாலும் இழுத்தடிப்புக்களாலும் கட்டிடப்பணி ஆமைவேகத்திலேயே நகரமுடிந்தது ஏழாண்டுகால ஈழுபறிக்குமத்தியில் அரசியல் காரணங்களுக்காக நகரபிதாவின் உத்தரவின் பெயரில் இக்கட்டடத் தொகுதியின் எச் வடிவத்தில் ஒரு சிறு பகுதியை திராவிட கட்டட சிற்பக்கலை மரபுக்கமைய அவசர அவசரமாக கட்டப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டதாக காண்பிக்கப்பட்டு 11 ஒக்டேபர் 1959 அன்று யாழ் முதல்வர் அ.த.துரையப்பாவினால்
திறந்த வைக்கப்பட்டது.

1981ல் நூலகம் எரியுண்ட வேளையில் கூட நரசிம்மனின் வடிவமைப்பான நூலகத்தின் முழுமையான கட்டட திட்டவரைபு பூர்த்தியாக்கப்பட்டிருக்கவில்லை. தென் கிழக்காசியாவிலேயே பெரிய நூலகம் என்ற இன்றைய கால தவறான கருத்தியல் விதைப்பு தமிழர் தரப்பின் தகவல் திரட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட வல்லது.

1950களில் இந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் எச் வடிவிலான திட்ட வரைபின்படி பல மாடிக் கட்டிடத்துடன் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தால் ஒருவேளை தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் பரிணமித்திருக்கலாம்.

ஈழத்தமிழரது வரலாற்று ஆவணங்களையும் கிடைத்தற்கரிய அறிவுப்பொக்கிசங்களயும் அதிகளவான பொது மக்கள் பயன்படுத்தும் நூலகமாகவும், யாழ்மக்களின் கல்வியின் ஊற்றாகவும் தென்னாசியாவில் பிரபலம் வாய்ந்ததும் தமிழிழத்தில் அன்றையநாளில் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 39 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.

யாழ் நூலக எரிப்பின் அரசியல் பின்னணியை நேக்கின் ஐக்கியதேசியக்கட்சி முன்னால் பாரளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸத்தருமான காரைநகரைச்சேர்ந்த கலாநிதி தியாகராஜாவை 24-05-1981ல் நாச்சிமார் கோவிலடியில் மாவட்டசபை பிரச்சாரக்கூட்டத்தில் வைத்து PLOTஅமைப்பைபின் சுந்தரம் (புதியபாதை) சுட்டுக்கொன்றார் இதனால் ஆத்திரமடைந்த அரசபடையானர் நாச்சிமார் அம்மன் கோயில் கோபுரத்தை எரித்து வன்முறையில் ஈடுபட யாழில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

மாவட்டசபைத் தேர்தலை குழப்புவதற்காக அன்றைய விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அனைவரும் லெப்.சீலன் தலைமையில் (18 பேர்)உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோயிலடியில் வைத்து அரசபடைகள் மீது முதலாவது வீதி மறிப்புத் தாக்குதலை 28.05.81 நள்ளிரவு ஒருமணியளவில் நடத்தினர்.

இதேநேரம் மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தல் ஆயத்தம் எல்லா இடமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  29.05.1981 அதிகாலை நல்லூரில் சிவசிதம்பரத்தின் பிராந்திய செயலகத்தில் ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்த 2 பேர் அரசபடைகள் கொல்லப்பட்டனர்.

இது இவ்வாரிருக்க காமினிதிசாநாயக்க, லலித்அத்துலத்முதலி, பிரேமதாசா ஆகியோருக்கு இடையேயான அதிகார முக்கோண போட்டியில் காமினி மற்வறையவர்களை வீழ்த்தி தான் முன்னனிக்கு வருவதற்காக இனவாத்த்தை கையிலெடுத்தார். யார் தமிழர்களுக்கு எதிராக பலமாக செயற்படுகிறார்களோ அவர்களே சிங்களதேசத்தின் கதாநாயகர்கள் என்ற அன்றைய சிங்கள இனத்தின் கூட்டுமனநிலையை தனக்கு சாதகமாக காமினி கையாண்டார் 31.05.1981அன்று யாழ்பாணத்திற்கு மூன்று பஸ்களில் சுமார் 150 வரையான காடையர்களை சிங்களதேசதிலிருந்து தருவித்து விடுப்பில் இருந்த பொலிஸ், யாழ் பொலிஸ் ஆகியோரையும் பயன்பருத்தி அன்றிரவு தானே முன்னின்று யாழ்நுாலகத்தை தீயிட்டுக்கொழுத்தி நாசவேளை செய்தான்.

யாழ்நூலகத்தை எரித்து அறியியல், பண்பாட்டு, இனவழிப்பை ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் செய்து முடித்தது. ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிசங்களான கையெழுத்துப்பிரதிகள், ஓலைச்சுவடிகள், சங்கிலியன் கால மருத்துவ நூல்கலான வாகடங்கள் என விலைமதிப்பற்ற 97 ஆயிரம் வரையிலான நூல்கள் எரிந்து சாம்பராகின. 01-06-1981ன் காலை தமிழினத்தின் சோகநாளாக கரிநாளாக மாறாத வடுவை ஏற்படுத்திய நாளாக விடிந்தது

-தி.திபாகரன்
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com