எதிர் வரும் தேர்தலில் வாக்களிக்க முன், உங்கள் சுய சிந்தனைக்கு-தி.தமிழரசன்

மறந்து விடக்கூடாது கூடாது! 
இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே சுமந்திரன் அவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

இலங்கையை ஆண்ட தமிழனை அடிமைப் படுத்தி, அடக்கி, ஆளத் துடித்த சிங்கள இன வெறியர்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாத்து, மீண்டும் ஆளவைக்கப் போராடி, ஈழ விருட்சத்தின் மலர்வுக்காக, மண்ணில் விதைகளாகப் புதைந்து கிடக்கும் மாவீர்களினதும், மக்களினதும், தியாகங்களின் மேல் நின்று, அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துரைத்துக் கொண்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, சிங்கள அரசிற்கு ஆதரவாக, அரசியல் ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் தமிழர்களின் அரசியல் களத்திற்கு தேவையா.

சிங்கள அரசபடைகளாலும், தமிழ் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டுக் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், இராணுவ விதி முறைகளுக்கு அமைவாக, பெற்றோர்களால், அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட பொது மக்களையும், போராளிகளையும் தேடி அலைந்து கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கேவலப்படுத்தும் வகையில் கருத்துக் கூறிய ஒருவரால், தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட முடியுமா? என்று சிந்திக்கத் தெரியாதவர்களால் மட்டுமே சுமந்திரன் போன்றவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

"தமிழர் தாயகத்தில் நடந்தது இனப் படுகொலை அல்ல, அது சாதாரண போர்க்குற்றமே" என்று கூறிய ஒருவரால், எந்த வகையில் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட முடியும்?

"போர்க் குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச் சுத்திகரிப்பு, மற்றும் படுகொலைகள் தொடர்பாகவும். விசாரிக்கப்பட வேண்டும்"  என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசிற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரால், எப்படி தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட முடியும்?

"விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு, ஆயுதப் போராட்டம் ஒரு வன்முறை, அதனை செய்தவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறிய ஒருவர் தமிழர்களின் பிரதிநிதியாக எப்படி செயற்பட முடியும்?

இன அழிப்பு செய்த "சிங்களவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக்  கிடைத்தது பெரும் பாக்கியம்" என்று கூறி, தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துரைத்து, கீழ்த்தரமான சிந்தனையுடன் செயற்படும் ஒருவர் தமிழர்களுக்கு தேவைதானா??

சிங்கள பொலிஸ், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்புடன், தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமிழர்களை, தன் எதிரிகளாகவும், தமிழர்களால் தனக்கு உயிர் ஆபத்து எனவும் வெளிக்காட்டிய, சுமந்திரனால் எப்படி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்?

தமிழர்களுக்காக எதையுமே செய்திராத அம்பிகா அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொடுக்க முனையும் சுமந்திரனின் சுயநல குறுக்குப் புத்தியால் தமிழர்களுக்கு எந்த தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??

விதண்டாவாதக் கருத்துக்களைக் கூறி, தமிழர்களின் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் சுமந்திரன் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும்,  இனப்பற்றற்ற, தன்மானத்தை இழந்தவர்களால் மட்டுமே, சுமந்திரன் போன்றவர்களை ஏற்று, வாக்களிக்க முடியும்.

யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களின் உரிமை, இருப்பினும் யாருக்கு? ஏன்? வாக்களிக்க வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டியதும், அதே மக்களின் கடமை!

தி.தமிழரசன்
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com