சுமத்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். - அரசியல் சாணக்கியன்

வணக்கம் உறவுகளே!


எனது அடுத்த பதிவின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமத்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் எந்தத் தரவும் தவறான தரவல்ல அதிகமான ஆதாரத்துடன் பதிவு செய்கிறேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது, வாக்களிக்க இருக்கும் உங்கள் வேட்பாளர்களின் முகத்தின் பின் இருக்கும் முகமூடிகளை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனது மக்களுக்காக, உண்மையை கொண்டுவருவதற்காக, எந்த எல்லைகளைக் கடக்கவும், செல்லவும் என்றுமே நான் அஞ்சியதில்லை. இது எனது கடந்தகால அனுபவம்.

நமது மக்களும் சரி, அரசியல் தொண்டர்களும் சரி, விடும் தவறு. நமக்குக் கிடைக்கும் அல்லது எமக்கு தலைமைகளாக வருவதற்கு இருக்கும் அரசியல் வாதிகளை, அவர்களின் பின் புலங்களை அறிந்துகொள்ள, அதிக முயற்சி செய்வதில்லை அங்கே தான் நாம் தவறிவிடுகிறோம்.

ஆரம்பத்திலேயே ஒருவரை சரியாக தெரிந்து கொண்டால், புரிந்து கொண்டால், அறிந்து கொண்டால். இன்றைய தமிழ் மக்களின் நிலைமை இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய அதிகம் வேட்பாளர்களின் தெரிவு. மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர், அவரின் பின்புல செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கான வேட்பாளர் தெரிவு, வர்த்தக ரீதியில் அதிக முதலீடுகளை செலுத்தக் கூடிய வேட்பாளர் தெரிவு, கட்சி தலைமைகளின் உறவுமுறை, வேட்பாளர் தெரிவு, இப்படித் தான் வேட்பாளர்கள் தெரிவு நடக்கிறது கூட்டமைப்பில்.

ஒட்டு மொத்தத்தில், அரசியல் தெரிந்திருக்க தேவையில்லை, மக்களை பற்றி தெரிந்திருக்க தேவையில்லை, முக்கியமாக நீங்கள் கடந்த காலத்தில் மக்களுக்காக எதுவும் செய்திருக்க தேவையில்லை. எமது கட்சி பலமானது எமது கட்சியில் கீழ் நீங்கள் போட்டியிட்டால் உங்களை வெற்றி அடைய வைப்போம் வெற்றியடைவீர்கள். இப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. இப்படியான தெரிவு தான், இன்று மக்கள் தெருவுக்கு வந்துள்ளார்கள் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டு.

ஆகவே, இன்றைய மக்களும் சரி, தொண்டர்களும் சரி, முடிந்தவரை வாக்களிப்பதற்கு முன் நீங்கள் வாக்களிக்கப் போகும் நபரை பற்றி அறிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பின்னர் தெளிவடைந்த பின் வாக்களியுங்கள்.

ஒரு தந்தை தனது மகளின் வாழ்க்கைக்காக எப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று கனவு, எண்ணங்கள், கற்பனைகள் வைத்திருக்கிறார். அதைவிட அதிகமாக நாங்கள் சிந்திக்க வேண்டும். இன்றைய வேட்பாளர்களை பற்றி. எமது மக்களையும், மண்ணையும், எனது உரிமையையும் காப்பதற்கு சரியான தலைமைகளை தெரிவு செய்யவேண்டும். அது உங்களின் கையில்.

உங்களின் ஒரு வாக்கு ஐந்து வருடங்களுக்கு உங்களை மண்டியிட வைக்கும். நீங்கள் தவறான ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும் பொழுது.
மக்களை வாழ வைப்பதற்கான வாக்குகளை செலுத்துங்கள். வேட்பாளர்களை வாழ வைப்பதற்கான வாக்கை என்றுமே செலுத்துவதற்கு எண்ணாதீர்கள். இது எனது அன்பு வேண்டுகோள்.

எனது பதிவு சரியென்று படும் பட்சத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...

அன்புடன்,
அரசியல் சாணக்கியன்,
Manikam Sinnathambi
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com