1983 ஜூலை 25: குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.


1983 ஜூலை 25: குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

ஈழ மக்கள் மீதான வெலிக்கடை படுகொலைகளை நேரடி அனுபவங்களாக பகிர இருந்தவர் சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் இயற்பெயரைக் கொண்ட டேவிட் அய்யா அவர்கள்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடை (Welikkada) சிறைதான் இலங்கையில் உள்ள சிறைகளிலேயே பெரியது. சுமார் 48 ஏக்கர் பரப்புள்ள அந்த சிறை பிரிட்டீஷாரால் 1841இல் கட்டப்பட்டது. 2000 பேர் வரை அடைத்து வைக்கக்கூடிய அந்தச் சிறையில்தான் 1980களில் தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் பகுதிகளில் காந்தீயம் என்னும் கல்விப் பண்ணையை நடத்தி வந்த டாக்டர் ராஜசுந்தரமும், டேவிட் அய்யாவும், சிங்கள படையினரால் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

வெலிக்கடை சிறையில் டாக்டர் ராஜசுந்தரம் கொல்லப்பட்ட அதே நாளில்தான் ஜெகன், குட்டிமணி, தங்கதுரையும் கொல்லப்பட்டார்கள்.

அந்தக் கொலைகளில் இருந்து தப்பியவர் டேவிட் அய்யா. அந்தக் கொலை நடந்தது 1983 ஜூலை 25ஆம் நாள். “சிறையில் நடந்த சித்திரவதைச் சம்பவங்களை எல்லாம் நான் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். ஏனெனில், மக்களுக்கு இந்த விஷயங்கள் தெரிய வேண்டும்.

இப்படியெல்லாம் கூட கஷ்டப்பட்டார்களா? என்று அனைவருக்கும் தெரிய வேண்டும்.

ஒருநாள் சிறை அதிகாரி ஒருவர், எங்களுக்கு ஒரு பரீட்சை வைக்கப் போவதாகக் கூறி எ,ங்களை முழங்காலில் இருக்கச் சொல்லி, சாப்பாட்டுத் தட்டினை வேறொரு மூலையில் வைத்துவிட்டு, ‘யார் நான்கு கால்களில் வேகமாகச் சென்று எடுத்துக்கொண்டு வருகிறீர்களோ, அவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது’ என்று கூறினான்.

நாங்கள் எதிர்க்க வலுவில்லாமல் அவர்களுக்குக் கேளிக்கை பொருளாக மாறி வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இதெல்லாம் நடந்த 1983ஆம் ஆண்டு, எனக்கு வயது 63 அல்லது 65 இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது தான், ஜூலை 25ஆம் தேதி சிறைக்கதவை உடைத்து திறந்து உள்ளே வந்தவர்கள், டாக்டர் ராஜசுந்தரத்தை வெளியில் இழுத்துப் போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில், அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.

அதே கலவரம் தான் கொழும்பு நகரிலும் வெடித்தது. 1983 ஜூலை 25இல் கொழும்பில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சிங்கள வெறியர்கள் சிறைச் சாலையின் கீழ் தள அறைகளுக்குள் புகுந்தார்கள். நாங்கள் மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்தோம். சிறை அதிகாரிகள் பூட்டுக்களைத் திறந்து சிங்களக் கைதிகளைத் திறந்து விட்டார்கள்.

அவர்கள் வெறியோடு தமிழர்கள் இருந்த ஒவ்வொரு அறையாகத் தாக்கினார்கள். அன்றைக்கு ஒரே நாளில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு முந்தைய நாள் நடந்த கொலைகள் பரவாயில்லையோ என்று நினைக்கும் அளவுக்கு, கொலைகள் நடந்தன.

அப்போது அவர்கள் குறிவைத்தது ஜெகன், குட்டிமணி தங்கதுரையை. வல்வெட்டித்துறை இளைஞர்களான இவர்கள் அன்றைய தினத்தில் டெலோ அமைப்பில் முக்கியமான போராளிகளாக இருந்தார்கள்.

ஜூலை 25ஆம் நாள் நடந்த கொலைவெறித் தாக்குதலின் நோக்கமே ஜெகன், குட்டிமணியை கொன்றொழிப்பதுதான்.

அந்த தாக்குதல் சிறை நிர்வாகத்தின் உதவியோடு சிங்கள குற்றவாளிகளால் நடத்தப்பட்டது. ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இம், மூவரில் குட்டிமணியே டெலோ அமைப்பைத் தொடங்கி, அதை வலுவான மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பாகவும் நடத்தியமையால் சிங்கள ராணுவம் அவரை குறிவைத்திருந்தது.

அடிக்கடி தமிழகம் வந்து செல்லும் போது அவரை தமிழகத்தில் வைத்து கடத்தல்காரர் என்று குற்றம்சாட்டி கைதுசெய்து, இலங்கைக்கு நாடு கடத்தி கொழும்பில் ஒப்படைத்தார்கள்.

"உண்மையில் அந்த இளைஞனுடன் நான் பேசியிருக்கிறேன்" . (டேவிட் அய்யா)

சிறையையோ, தண்டனைகளையோ ஒரு பொருட்டாக நினைக்கக் கூடியவரல்ல. காரணம், அதற்கு முன்னமே பலமுறை அதே வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார் தான். ஆனால், இதுவே அவருக்கு கடைசி சிறை நாளாக இருக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை.

முன்பே திட்டமிடப்பட்டு ஒவ்வொரு அறையின் சாவிகளையும் வைத்து சிறைக்கதவுகளைத் திறந்து சிங்கள வெறியர்களை ஆயுதங்களோடு உள்ளே அனுப்பி விட்டுக், கதவுகளை மூடி விடுவார்கள். சிறைக்குள்ளேயே அவர்கள் அடித்துக் கொல்லப்படுவார்கள். அப்படி கொல்லப்பட்டவர் தான் குட்டிமணி.

மூன்று நாள் விட்டு, விட்டு, சிறையில் நடந்த தாக்குதலில் மொத்தமாக 53 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்கள் நினைத்த மாதிரி முக்கியமான பல அரசியல் சமூக பிரமுகர்களை எல்லாம் கொன்றொழித்து விட்டு, எஞ்சியிருந்த எங்களை பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினார்கள்.

பின்னர் மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை மீட்டார்கள் போராளிகள்.

அங்கிருந்து தப்பி நாங்கள் 1983இல் தமிழகம் வந்தோம்” என்று தன் பழைய நினைவுகளைக் கூறுகிறார் டேவிட் அய்யா.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com