அதிக வாக்கு சரிவை சந்திக்க போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

அதிக வாக்கு சரிவை சந்திக்க போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. வீட்டின் அத்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அதிகப்படியான வாக்குகளை பறிகொடுக்க போகிறது மாற்றுக் கட்சிகள் இடம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மை முதல் காரணம்.

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்துவிட்டது.மாவை சேனாதிராஜா சரவணபவன் சிறீதரன் சுமந்திரன் சித்தார்த்தன் ஆகியோருக்கு இடையில் தனிப்பட்ட வெற்றியை நோக்கி முரண்பாடு முற்றி விட்டது.அதில் மேலதிகமாக ரவிராஜ் சசிகலாவும் பங்கு கொண்டு விட்டார்.

கூட்டமைப்பு தொண்டர்களும் சரி மக்களும் சரி கூட்டமைப்பைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடு காரணமாக. ஆகவே வீடு சரியத் தொடங்குகிறது அரசியலில் இருந்து.

மேலும், மாற்று கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்த்து புதிய மாற்றமொன்று தேவை என்ற நோக்கில், தோல்வியை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரத் தொடங்கி விட்டது.

கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தடவை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறுவதே கடினமான விடயம்.  போராடினாலும் பயன் அடைய முடியாத நிலைமையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் உள்ளனர்.

புதிதாக உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு வாக்குகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குகள்.

முக்கியமாக அந்தக் கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிசமான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணும். ஒட்டு மொத்தத்தில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு வாக்குகளும் கூட்டமைப்புக்கு சொந்தமானவை.

மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மற்றும் இதர கட்சிகள் ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயல்பாட்டின் வெறுப்பு காரணமாக. ஒவ்வொரு வேட்பாளர்களும், ஒவ்வொரு விதமான தேர்தல் பிரச்சாரம் நான், நீ, என்ற போட்டி.

சிங்கள ராணுவ தளபதி ரத்னபிரிய நூறு வாக்குகளை பெற்றுக் கொள்வதாக இருந்தால், அந்த வாக்கு கடந்த காலத்தில் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட வாக்குகள். பிரபா கணேசன் 500 வாக்குகளை பெற்றுக் கொள்வதாக இருந்தால், அதுவும் கூட்டமைப்புக்கு சொந்தமான வாக்குகள். சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் 10 வாக்குகளை பெற்றுக் கொண்டால், அந்த வாக்குகளும் கூட்டமைப்புக்கு சொந்தமானது. இப்படி அதிக காரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

கூட்டமைப்பின் வாக்குகள் உடை பட்டுப்போகும் சந்தர்ப்பங்களை, வீட்டின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

எனது கணிப்பு சரியாக இருந்தால் வடக்கு (யாழ் வன்னி தொகுதி) தேர்தல் தொகுதியில் நாலிருந்து ஐந்து ஆசனங்களுக்கு மேல் கூட்டமைப்பால் வெற்றியடைய முடியாது இதுவும் சந்தேகம்தான், முழுமையாக.

என்றுமே இல்லாதவாறு இந்த முறை தேர்தலில் கூட்டமைப்புக்கான எதிர் விமர்சனங்கள் அதிகமாக உள்ளன.

தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த தேசத்திலும் சரி, திரும்பும் திசை எங்கும், ஊடகம் எங்கும் தொடர்பு கொள்ளும் மக்களிலிருந்து, சந்திக்கும் மக்களிலிருந்து, அனைவரும் கூட்டமைப்புக்கு எதிராக வாக்கை செலுத்துவதற்கு (அழிப்பதற்கு) தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஒரு நகைச்சுவை எனது முகநூலில் இருக்கும் கூட்டமைப்பின் தொண்டர்கள் சிலர், என்னை தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பி. கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவரை பற்றி எழுதுங்கள், அவரைப் பற்றி விமர்சியுங்கள், என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

அவரைத் தூக்க வேண்டும், இவரைத் தூக்க வேண்டும், இப்படி அவர்களுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் என்னிடம் வந்து கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. நிச்சயம் அது மக்களுக்கான ஒரு விடிவாகத் தான் இருக்கும்.

மாற்றம் ஒன்று மட்டும் தான் மக்களுக்கான அரசியல் அதை நோக்கிப் பயணியுங்கள் அனைவரும்.

மாற்றம் தேவை என்று எண்ணுவார்கள் எனது பதிவு சரியென்று படும் பட்சத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...

அன்புடன். அரசியல் சாணக்கியன்.
-Manikam Sinnathambi
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com